100வது நாளை எட்டியது பாரத் ஜோடோ யாத்திரை: காங்கிரஸார் உற்சாகம்!

100வது நாளை எட்டியது பாரத் ஜோடோ யாத்திரை: காங்கிரஸார் உற்சாகம்!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று 100 வது நாளை எட்டியுள்ளது. ராஜஸ்தானில் இப்போது இந்த நடைபயணம் சென்று கொண்டுள்ளது.

இதுவரை சுமார் 2,600 கிமீ தூரத்தை கடந்துள்ள பாரத் ஜோடோ யாத்திரை இன்று 100 நாட்களை எட்டியுள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இன்று காலை 6 மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் உள்ள மீனா உயர்நீதிமன்றத்திலிருந்து தனது யாத்திரையை தொடங்கினார்.

பாரத் ஜோடோ யாத்திரையின் 100 நாட்களைக் கொண்டாடும் வகையில், காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு அதன் முகப்பு படத்தை (டிபி) "யாத்திரையின் 100 நாட்கள்" என்று மாற்றியுள்ளது.

மீனா உயர்நீதிமன்றத்தில் இருந்து தொடங்கிய யாத்திரை கிரிராஜ் தரன் கோவிலில் காலை 11 மணியளவில் இடைவேளை எடுக்கும். இதனைத் தொடர்ந்து ஜெய்ப்பூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் மாலை 4 மணியளவில் செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு, ராகுல் காந்தி நேரடி இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பாரத் ஜோடோ யாத்ராவின் 100 நாட்களைக் கொண்டாடும் வகையில் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7 மணியளவில் ஆல்பர்ட் ஹாலில் நிகழ்ச்சி ஒன்றினை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

ராஜஸ்தானில் பாரத் ஜோடோ யாத்திரையின் 12வது நாள் இன்றாகும். செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த யாத்திரை இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தை கடந்து ராஜஸ்தானில் உள்ளது. இந்த யாத்திரை, டிசம்பர் 21-ம் தேதி ஹரியானாவில் நுழைகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in