விவசாயியாக மாறிய ராகுல் காந்தி... வைரல் புகைப்படங்கள்!

விவசாயியாக மாறிய ராகுல் காந்தி... வைரல் புகைப்படங்கள்!

சத்தீஸ்கரில் விவசாயிகளுடன் அறுவடை பணியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பியின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, சத்தீஸ்கரின் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி விவசாயிகளுடன் அறுவடைப் பணிகளை மேற்கொண்டு, கலந்துரையாடினார். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கம், “ விவசாயிகளுடனான காங்கிரஸின் உறவு மிகவும் பழமையானதும், வலுவானதுமாகும். அது காலப்போக்கில் ஆழமாகி வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in