`அதிமுகவில் நிகழும் பிளவு குறித்து நான் கவலைப்படவில்லை'- மத்திய அமைச்சர் வி.கே.சிங்

`அதிமுகவில் நிகழும் பிளவு குறித்து நான் கவலைப்படவில்லை'- மத்திய அமைச்சர் வி.கே.சிங்

ராகுல் காந்தி தனது யாத்திரையின் மூலம் மத நல்லிணக்கத்தை சிதைப்பதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் குற்றம்சாட்டினார்.

மத்திய அமைச்சர் வி.கே சிங் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்குக் கொடுத்த பேட்டியின் போது கூறியதாவது, “கடந்த 2019-ம் ஆண்டு கன்னியாகுமரி அருகே உள்ள நரிக்குளத்தில் புதிய பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். ரத யாத்திரை என்னும் பெயரில் காங்கிரஸ் கட்சியினர் இந்த பாலத்தில் பிரதமர் மோடியின் படத்தை சேதப்படுத்தியுள்ளனர். மோடி இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் பிரதமர் ஆவார். ஆனால் காங்கிரஸார் குறுகிய கண்ணோட்டத்துடன் பிரதமர் மோடியின் படத்தை சேதப்படுத்தியுள்ளனர்.

ராகுல் யாத்திரையின் போது சில மதத்தலைவர்களை சந்தித்துள்ளார். ஆனால் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ராகுல் மத நல்லிணக்கத்தை சிதைக்கும்வகையில் செயல்படுகிறார்கள். பத்து ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் சாலைப்பணி நடக்கவில்லை. பாஜக வந்த பின்பு தான் சாலைப்பணிகள் நடக்கிறது. காவல் கிணறு-களியக்காவிளை சாலைப்பணிகள் மந்தகதியில் வேலை நடக்க மாநில அரசே காரணம். அதிமுகவில் நிகழும் பிளவு குறித்து நான் கவலைப்படவில்லை. பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். கூட்டணி தேர்தல் நேரத்திற்கு உரியது. மற்றபடி பாஜகவை பலப்படுத்துவதே என் பணி” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in