நடைபயணத்திற்கு வந்த இடத்தில் கண்களை மூடி தியானம் செய்த ராகுல்!

20 நிமிடங்கள் கண்களை மூடிய நிலையில் ராகுல்
20 நிமிடங்கள் கண்களை மூடிய நிலையில் ராகுல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார். இந்தப் பயணத்திற்காக கன்னியாகுமரி வந்திருக்கும் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து காந்தி மண்டபத்திற்கு வந்தார். அப்போது ராகுல் 20 நிமிடங்களுக்கும் மேலாக கண்களை மூடி தியானம் செய்தார்.

இந்திய ஒற்றுமைப் பயணத்திற்காக வந்த ராகுல்காந்தி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வியிட்டார். தொடர்ந்து காந்தி மண்டபத்தில் ராகுல் காந்தியின் இந்தப் பயணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் காந்தி மண்டபத்தின் உள்ளே தரையில் அமர்ந்தனர். அப்போது அங்கு இசையஞ்சலி மூலம் மகாத்மா நினைவுகூறப்பட்டார்.

எங்கும் சாந்தி நிலவ வேண்டும், பாருக்குள்ளே நல்ல நாடு, ரகுபதி ராகவா ராஜாராம் ஆகிய பாடல்கள் இசையஞ்சலியாக ஒலிக்கப்பட்டது. தமிழிலேயே இந்த இசையஞ்சலி நடந்தது. இருபது நிமிடங்களுக்கும் மேலாக ஒலிக்கப்பட்ட இந்த இசையின் போது ராகுல் காந்தி தன் கண்கள்சை மூடிக்கொண்டு தியான நிலையிலேயே இருந்துவருகிறார் ராகுல் காந்தி. இந்த இசையஞ்சலி முடிந்ததும் கதரால் நெய்யப்பட்ட தேசிய கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியிடம் கொடுக்கும் நிகழ்வும் அந்தக் கொடியைப் பெற்றுக்கொண்டு ராகுல் காந்தி காந்தி மண்டபத்தில் இருந்து 600 மீட்டர் தூரம் நடந்தே பொதுக்கூட்ட மேடைக்குச் செல்வதுமான உணர்ச்சிப்பூர்வ சடங்குகள் நடந்தது. ராகுல்காந்தியின் நடைபயணத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் வந்து குவிந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in