குமரியில் சங்கமிக்கும் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின்: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

குமரியில் சங்கமிக்கும் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின்: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

கன்னியாகுமரியில் இன்று மாலை காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தியின் நடைபயண தொடக்க நிகழ்வு நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இதனை முன்னிட்டு கன்னியாகுமரியில் இன்று சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலாத்தளமான கன்னியாகுமரியில் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து, செல்வது வழக்கம். கேரளத்தில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் இன்று ராகுல் நடைபயணத்தின் தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த கன்னியாகுமரியும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. முதல்கட்டமாக ரவுண்டானா பகுதியிலும், இரண்டாவது கட்டமாக காந்தி மண்டபம் பகுதியிலும், மூன்றாவது கட்டமாக காமராஜர் மண்டபம் பகுதியிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலா பகுதியான கடற்கரை சாலை, காந்தி மண்டப சாலை, திரிவேணி சங்கம சாலை ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையில் இந்நிகழ்ச்சி முடியும்வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in