வான் அளந்து நிற்கும் வள்ளுவர் சிலையை ரசித்த ராகுல்: கன்னியாகுமரியில் குவியும் காங்கிரஸார்

வான் அளந்து நிற்கும் வள்ளுவர் சிலையை ரசித்த ராகுல்: கன்னியாகுமரியில் குவியும் காங்கிரஸார்

இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து இன்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி தொடங்குகிறார். இதற்காக அவர் சற்றுமுன்பு கன்னியாகுமரி வந்தடைந்தார். அவர் இப்போது பூம்புகார் படகில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட்டு வருகிறார்.

தயார் நிலையில் பொதுக்கூட்ட மேடை
தயார் நிலையில் பொதுக்கூட்ட மேடை படம்: ஜாக்சன் ஹெர்பி

இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ராகுல்காந்தி சற்றுமுன்பு கன்னியாகுமரி வந்தார். அவர் இப்போது கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் படகில், தனிபடகு மூலம் விவேகானந்தர் பாறையையும், 133 அடி பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டு வருகிறார்.

தமிழகத்தில் குமரிமாவட்டத்தில் நான்கு நாள்கள் நடக்கும் ராகுல்காந்தியின் நடைபயணத்தில் கலந்துகொள்ளும்வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் காங்கிரஸ் தொண்டர்கள் க்ன்னியாகுமரியில் குவிந்துள்ளனர்.

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட்ட பின்பு மீண்டும் படகு மூலம் கன்னியாகுமரி கரைக்கு வரும் ராகுல்காந்தி தொடர்ந்து காந்தி, காமராஜர் மண்டபங்களையும் பார்வையிடுகிறார். காந்தி மண்டபத்தில் நடக்கும் பஜனையிலும் ராகுல் கலந்து கொள்கிறார். காந்தி மண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கதரால் நெய்யப்பட்ட தேசியக் கொடியை கொடுத்து ராகுல் காந்தியின் யாத்திரையைத் தொடங்கி வைக்கிறார். இதன் பின் மண்டபம் முன்பு இருந்து 700 மீட்டர் தூரத்திற்கு நடந்து பொதுக்க்கூட்ட மேடைக்கு ராகுல் காந்தி செல்கிறார்.

அந்த மேடையில் தமிழக முத்ல்வர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான், ஜார்கண்ட் முதல்வர்களுக்கான இருக்கைகள் உள்பட 9 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தியும் சேர்ந்து கலந்துகொள்ளும் கூட்டம் என்பதால் இருகட்சித் தொண்டர்களும் கன்னியாகுமரியில் கூட்டமாகக் குவிந்துள்ளனர். 2 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in