
ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு லடாக் மற்றும் லே பகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சில மாதங்களுக்கு முன் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார். கன்னியாகுமரியில் துவங்கிய இந்த பயணத்தின் போது நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று மக்களையும், தொண்டர்களையும் சந்தித்தார்.
இந்த நடைபயணத்தின் போது செல்ல முடியாமல் விடுபட்ட பகுதிகளுக்கு அவ்வப்போது ராகுல் காந்தி சென்று வருகிறார். இந்த பயணங்களின் போதும் மக்களை சந்திக்கிறார். மேலும் இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது நடைபயணத்தின்போது காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி லடாக் செல்லவில்லை. இந்நிலையில், 2 நாள் பயணமாக ராகுல் நேற்று காஷ்மீர் புறப்பட்டுச் சென்றார். லடாக் மற்றும் லே பகுதிகளுக்குச் செல்லும் அவர் மக்களை சந்தித்துப் பேசுகிறார்.