பாஜகவில் இணைகிறாரா ராகுல் டிராவிட்?

பாஜகவில் இணைகிறாரா ராகுல் டிராவிட்?
ராகுல் டிராவிட்

பாரதிய ஜனதாக கட்சியில் ராகுல் டிராவிட் இணைய இருப்பதாக வட இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன. இது குறித்தான விளக்கத்தை ராகுல் டிராவிட் இன்று தெரிவித்திருக்கிறார்.

ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்

இமாசல பிரதேசத்தில் பாஜக சார்பாக நடைபெறும் யுவ மோர்ச்சா தேசிய செயற்குழு, வரும் மே 12 முதல் 15 வரை தர்மசாலாவில் நடைபெறுகிறது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இதில் பங்கேற்கிறார்கள். இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் கலந்து கொள்ளவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இந்த ஆண்டு இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் ராகுல் டிராவிட் பாஜக-வில் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பா.ஜ.கவில் இணைவது குறித்து வந்த செய்தி முற்றிலும் தவறானது என மறுத்துள்ளார் ராகுல் டிராவிட். இது குறித்து அவர் கூறுகையில். “இமாசல பிரதேசத்தில் நடைபெறும் யுவ மோர்ச்சா தேசிய செயற்குழு கூட்டத்தில் நான் கலந்து கொள்வேன் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. அந்த அறிக்கை தவறானது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்“ என வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

Related Stories

No stories found.