இங்கிலாந்திலிருந்து திரும்பிய ராகவ் சதா... அர்விந்த் கேஜ்ரிவாலுடன் அவசர சந்திப்பு

ராகவ் சதா - அர்விந்த் கேஜ்ரிவால்
ராகவ் சதா - அர்விந்த் கேஜ்ரிவால்

ஸ்வாதி மலிவாலை அடுத்து மற்றொரு ராஜ்யசபா எம்பியான ராகவ் சதா இன்று அர்விந்த் கேஜ்ரிவாலை நேரில் சந்தித்தார். இங்கிலாந்திலிருந்து திரும்பிய வேகத்தில் அவர் கேஜ்ரிவாலை சந்தித்திருப்பது அரசியல் களத்தில் கவனம் பெற்றிருக்கிறது.

அர்விந்த் கேஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்கு வருகை தந்த ராஜ்ய சபா எம்பி ஸ்வாதி மலிவால், கேஜ்ரிவாலின் உதவியாளரால் தாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக ஸ்வாதி மலிவால் போலீஸ் புகாரின் பேரில், கேஜ்ரிவால் உதவியாளரான பிபவ் குமார் இன்று தைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கைதாகி அர்விந்த் கேஜ்ரிவால் சிறையிலிருந்தபோது அது குறித்து ஆட்சேபம் எதுவும் தெரிவிக்காத வகையில், கட்சியின் ராஜ்யசபா எம்பியான ஸ்வாதி மலிவால் மீது கேஜ்ரிவால் அபிமானிகள் அதிருப்தியில் இருந்தனர். இந்த விவகாரமே அவர் மீதான தாக்குதல் புகார் மற்றும் கைது நடவடிக்கை வரை சென்றது.

 ஸ்வாதி மலிவால்
ஸ்வாதி மலிவால்

முன்னதாக டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்த வகையில், ஸ்வாதி மலிவால் தேசிய அளவில் பிரபலமாகி இருந்தார். கேஜ்ரிவால் வீட்டில் தான் தாக்கப்பட்டதாக மலிவால் எழுப்பிய புகாரை முன்வைத்து, மக்களவை தேர்தல் களத்தில் பாஜக அரசியல் புகாராக மாற்றியது. இதனிடையே கேஜ்ரிவால் கைதின்போது இங்கிலாந்தில் இருந்தபடி, அமைதியில் ஆழ்ந்திருந்த ராகவ் சதா அவசரமாக இந்தியா திரும்பினார். கேஜ்ரிவாலுக்கு மிகவும் நெருக்கமான ராகவ் சதா, முன்னதாக மக்களவைத் தேர்தல் மும்முரம் மற்றும் கேஜ்ரிவால் கைது ஆகியவற்றின் மத்தியிலும், இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்புவதை தவிர்ப்பதாக பாஜக ஐடி அணியால் சாடலுக்கு ஆளாகி வந்தார்.

ஆம் ஆத்மி தலைவர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டு வந்த நிலையில், தான் கைதாவதை தவிர்க்கவே அவர் தனது இங்கிலாந்து இருப்பை தொடர்ந்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கு ஆளானார். கேஜ்ரிவால் கைது தொடர்பாக ஓரிரு எக்ஸ் தள பதிவுகளுக்கு அப்பால் ராகவ் சதா பெரிதாக எதிர்வினையாற்றாததும் அவர் மீதான ஐயத்தை அதிகரித்தது. ஆம் ஆத்மி தலைவர்களில் ஒரு சிலர் வழக்கு விசாரணை நெருக்கடிகளுக்கு அஞ்சி மவுனம் காப்பதும், கட்சியிலிருந்து வெளியேறியதும் அரங்கேறி வந்த சூழலில் ராகவ் சதாவின் மவுனம் விமர்சனத்துக்கு ஆளானது.

ராகவ் சதா
ராகவ் சதா

பாஜகவின் குழப்படிகளை மீறி, கேஜ்ரிவாலின் அபிமானத்துக்குரிய ராகவ் சதாவை ஆம் ஆத்மி கட்சியும் சக தலைவர்களும் விட்டுக்கொடுக்கவில்லை. கண் அறுவை சிகிச்சைக்காக லண்டன சென்றிருக்கும் ராகவ் சந்தா, அது முடிந்ததும் மருத்துவமனை ஓய்வை அடுத்து இந்தியா திரும்புவார் என்றும், ஆம் ஆத்மி கட்சிக்கான தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்பார் என்றும் கட்சி சார்பில் விளக்கம் வெளியானது.

கேஜ்ரிவால் கைதாகி சிறையில் இருந்தபோது, கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டவர்கள், கள்ள மவுனம் காத்தவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிரான கட்சித் தலைமையின் அதிருப்தியும் அதிகரித்து வருகிறது. அவற்றில் ஒன்றாகவே ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதான சம்பவமும் போலீஸ் புகார் வரை சென்றது. இவற்றுக்கு மத்தியில் இங்கிலாந்திலிருந்து அவசரமாக டெல்லி திரும்பிய ராகவ் சந்தா எம்.பி., உடனடியாக அர்விந்த் கேஜ்ரிவாலை அவரது வீட்டில் நேரடியாக சந்தித்துள்ளது தலைநகரத்து அரசியலில் முக்கிய நிகழ்வாக கவனம் பெற்றுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


லிவிங் டூ கெதர் வாழ்க்கை... நடிகை இறந்த ஒரே வாரத்தில் சின்னத்திரை நடிகரும் தற்கொலை!

சிறுவன் உயிரிழந்த விவகாரம்... குற்றாலம் அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு!

அதிர்ச்சி... 4 மாதங்களில் 430 கொலைகள்... கதி கலங்க வைக்கும் புள்ளி விவரம்!

இசையமைப்பாளர் ரஹ்மான் மகளின் புது அவதாரம்... நெகிழ்ச்சி பதிவு!

அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பை எந்த அரசாலும் மாற்ற முடியாது... அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in