விருதுநகர் நாடார் ஓட்டுகள் நமக்குத்தான்... நம்பிக்கையுடன் தலைவர்களை நாடும் ராதிகா!

கரிக்கோல் ராஜை சந்தித்த ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள்
கரிக்கோல் ராஜை சந்தித்த ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள்

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் களம் இறக்கப்படாத நிலையில் விருதுநகர் தொகுதியில் அந்த ஓட்டுக்களை முழுதாக குறிவைத்து நடிகை ராதிகா சரத்குமார் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

ராதிகா
ராதிகா

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிட அனைத்துக் கூட்டணிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்களில் பெரும்பாலானவர்கள் நேற்று வேட்பு மனு தாக்கலும் செய்துவிட்டனர். எஞ்சியுள்ளவர்களோ நாளைக்குள் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. மேலும் உள்ள 19 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர்களில் ஒருவர் கூட நாடார் சமூகத்தைச் சார்ந்தவர் இல்லை என்று அந்த சமூகத்தைச் சார்ந்த பல்வேறு அமைப்புகள் திமுகவை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. 

கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசும் ராதிகா
கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசும் ராதிகா

ஆனாலும், அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக கனிமொழி நாடார் தானே என்று திமுகவினர் எதிர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது எப்படி அவர் நாடார் ஆவார் என்று சிலர் எதிர் விமர்சனங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால் நாடார் சமூக மக்கள் திமுக மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. இது குறித்த விமர்சனங்களை பாஜகவினர் தொடர்ந்து நாடார் சமூக மக்கள் மத்தியில் வைத்து வருகின்றனர்.  விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள நடிகை ராதிகா சரத்குமார் முழு முயற்சியாக நாடார் சமூக மக்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக பெரும் முயற்சியில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார். 

அந்த தொகுதியில் சுமார் ஒரு லட்சத்துக்கும்  மேற்பட்ட நாடார் சமூக வாக்குகள் இருக்கும் நிலையில் நாடார் சமூகத்தின் பிரதிநிதிகள், நாடார் சமூகத்தின் அமைப்புக்கள்  என ஒவ்வொருவரையும் விட்டு விடாமல் தேடிச் சென்று ராதிகாவும், அவரது கணவர் சரத்குமாரும் தங்களுக்கு ஆதரவு தருமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

அவ்வகையில் நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜை அவரது வீட்டுக்கு சென்று ராதிகா சந்தித்தார். நாடார் அமைப்புகளில் மிகவும் வலுவாக உள்ள அமைப்பு அது.  இப்படி நாடார் சமூக மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளை பெரும் வகையில் பாஜக வேட்பாளர் ராதிகா  திட்டமிட்டு களப்பணியாற்றி வருவதால் திமுகவினர் கலக்கமடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in