`இந்தியாவில் மோடி, அமித்ஷான்னு ரெண்டு அக்யூஸ்ட் இருக்காங்க'- பகீர் கிளப்பும் ராதாரவி!

`இந்தியாவில் மோடி, அமித்ஷான்னு ரெண்டு அக்யூஸ்ட் இருக்காங்க'- பகீர் கிளப்பும் ராதாரவி!

“இந்தியாவில் ரெண்டே ரெண்டு அக்யூஸ்ட்டுங்க இருக்காங்க. ஒன்னு மோடி. இன்னொன்னு அமித் ஷா” எனச் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகர் ராதாரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுகவை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார். இந்த நிழக்வில் பேசிய ராதாரவி, “பாஜக-ன்னா கூட்டம் வராதுன்னு சொல்வாங்க. அவங்க சொல்றது போலக் கூட்டமெல்லாம் வராது. ஏன்னா காசு கொடுத்துக் கூட்டத்தை பாஜகவுல கூட்டமாட்டாங்க. கருநாகராஜன் ஒரு கூட்டம் வச்சாரு பாருங்க. எவ்வளவு கூட்டம் வச்துச்சு. கடைசியா போனவங்களுக்கு தயிர்சாதம்தான் கிடைச்சது. அதுல வளர்ந்ததுதான் இந்த கட்சி. குவாட்டருக்கும் பிரியாணிக்கும் அலையுறவங்க நாங்க கிடையாது. ஆனால் அதையெல்லாம் அடிக்கத் தெரியாதவங்க நாங்க இல்லை. கலைஞர் குடும்பத்துல இருந்து ஒருத்தர் முதல்வரா வந்திருக்கறதுல எனக்குச் சந்தோஷம்தான். ஆனால் கூட இருக்கறதுங்கதான் சரியில்லை.

அண்ணாமலையை வளர்த்துவிட்டதே திமுக-காரங்கதான். அவங்களுக்கு காலம் முழுவதும் நன்றியோட இருக்கணும். திமுக ஆட்சி எந்த நேரத்திலும் போயிடும். எதிர்பார்த்துகிட்டே இருக்கலாம். மகாராஷ்டிராவில் ஆப்பு வெச்சோம். நமக்கு அதிக சீட்டு இருந்தாலும் அங்க நம்மாளு துணை முதலமைச்சர்தான். அதுதான் நம்ம பெருந்தன்மை. இந்தியாவில் ரெண்டே ரெண்டு அக்யூஸ்ட்டுங்க இருக்காங்க. ஒன்னு மோடி. இன்னொன்னு அமித் ஷா. மவன கரு அறுத்துடுவானுங்க ஜாக்கிரதை. பத்தாயிரம் தடவை ஒன்றிய அரசாங்கம்னு சொன்னாலும் சரி, பத்தாயிரம் தடவை திராவிட மாடல்னு சொன்னாலும் சரி, கண்டுக்கவே மாட்டோம். இதெல்லாம் சோறு போடாதுங்கய்யா. பாஜகவின் நம்பிக்கை நட்சத்திரமே அண்ணாமலைதான். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என எல்லோரையும் பார்த்து இருக்கேன். அண்ணாமலையைப் போலச் சொந்த பேச்சுத் திறமை உள்ளவர்களைப் பார்த்தது இல்லை. பேச்சுத் திறமை என்றவுடன் கனிமொழிதான் ஞாபகம் வருது. அப்பாவைப் போல பேப்பரைப் பார்க்காமல் பேசுறாங்க. திமுகவிற்கு தலைமையாக வந்துவிடுவாங்களோன்னு பயமா இருக்கு. நல்ல வேளை ஸ்டாலின் அதற்கு விடமாட்டார்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in