`பெற்றோர்களை பதற விடலாமா அமைச்சரே?'- ஸ்மிருதி இரானிக்கு சு.வெங்கடேசன் கேள்வி

`பெற்றோர்களை பதற விடலாமா அமைச்சரே?'- ஸ்மிருதி இரானிக்கு சு.வெங்கடேசன் கேள்வி

"மத்திய அரசின் விருது பெறுவதற்கு புதிய இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழி இன்னும் உருவாக்கப்படவில்லை. விருதுகளுக்காக விண்ணப்பிக்க முனையும் குழந்தைகளை, அவர்களின் பெற்றோர்களை பதற விடலாமா அமைச்சரே?" என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார்" விருதுக்காக மதுரையை சேர்ந்த ஒரு குழந்தை விண்ணப்பிப்பது சம்பந்தமாக இரண்டு கடிதங்களை அமைச்சருக்கு எழுதியுள்ளேன். பழைய இணைய முகவரியில் விண்ணப்பித்தால் மட்டும் போதாது; மேம்படுத்தப்பட்ட புதிய இணையதளத்தில் விண்ணப்பியுங்கள் என்று பதிலளித்த ஒன்றிய அமைச்சர், கடைசி தேதி 30.09.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

3 நாட்களில் நீட்டிக்கப்பட்ட தேதியும் முடிவடைகிறது. ஆனால் புதிய இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழி இன்னும் உருவாக்கப்படவில்லை. விருதுகளுக்காக விண்ணப்பிக்க முனையும் குழந்தைகளை, அவர்களின் பெற்றோர்களை பதற விடலாமா? அமைச்சரே, விரைவில் இணையதளத்தை சரிசெய்து விண்ணப்பம் பெற வழி ஏற்படுத்துங்கள். விண்ணப்ப கடைசி தேதியை நீட்டியுங்கள்'' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in