அதிமுக தந்த வெள்ளி டம்ளரில் டீ போடுங்க: ஈரோடு இடைத்தேர்தலில் வைரலாகும் வீடியோ

வெள்ளி டம்ளரில் டீ கேட்கும் வாலிபர்.
வெள்ளி டம்ளரில் டீ கேட்கும் வாலிபர்.அதிமுக தந்த வெள்ளி டம்ளரில் டீ போடுங்க: ஈரோடு இடைத்தேர்தலில் வைரலாகும் வீடியோ

அதிமுக தரப்பினர் தந்த இந்த வெள்ளி டம்ளரில் டீ போடுங்க என்று ஒருவர் தேநீர் கடைக்குச் சென்று வாலிபர் கேட்கும் வீடியோ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் திமுகவினரால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுக சார்பில் தென்னரசும், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகாவும் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு கட்சி சார்பிலும் வீடு, வீடாக வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு கேட்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வாக்காளர்களை வளைக்க பணப்பட்டுவாடா நடப்பதுடன் குக்கர், கொலுசு, ஸ்வீட் பாக்ஸ் உள்ளிட்டவை வீடு, வீடாக சப்ளை செய்யப்படுகிறது என்ற புகாரும் எழுந்துள்ளது. குறிப்பாக ஆளுங்கட்சியினர் வீட்டுக்கு வீடு சென்று குக்கர் கொடுத்து வருவதாக அதிமுகவினர் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் கோழிக்கறி, மளிகை சாமன் உள்ளிட்டவற்றோடு ஒரு ஓட்டிற்கு 4 ஆயிரம் ரூபாயை ஆளுங்கட்சி கொடுத்து வருவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக முன்னாள் சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக வெள்ளி டம்ளர் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மிக மிகச்சின்ன அளவிலான அந்த வெள்ளி டம்ளரில் தேநீர் கடைக்கு ஒரு வாலிபர் செலகிறார். அத்துடன் "அதிமுக தரப்பினர் தந்த இந்த வெள்ளி டம்ளரில் டீ போடுங்க" என்று அவர் கேட்கிறார். இரண்டு விரல்கள் அளவில் உள்ள அந்த சின்ன டம்ளரை கடைக்காரர் வாங்கிப் பார்க்கிறார். அத்துடன், " இதில் எல்லாம் டீ போட முடியாதுங்க" என்கிறார். "இரட்டை இலை கட்சிக்காரங்க தந்தது" என்று டீ வாங்க வந்தவர் சொல்லவும், " இந்த டம்ளரில் எதுவும் போட முடியாது" என்று மறுத்து கண்ணாடி டம்ளரில் கடைக்காரர் டீ போட்டு வாலிபரிடம் தருகிறார். இந்த வீடியோவை திமுகவினர் தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in