குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்... மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பஞ்சாப் ஆளுநர்!

பன்வாரிலால் புரோகித்
பன்வாரிலால் புரோகித்

பஞ்சாப் மற்றும் தமிழக ஆளுநர்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கும் நிலையில், அதற்காக  சம்பந்தப்பட்ட ஆளுநர்கள் இருவரும் தங்கள் நிலைப்பாட்டை கொஞ்சம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

தமிழகத்தில் திமுக ஆட்சியும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியும் நடைபெற்று வருகிறது.  இந்த இரண்டு கட்சிகளும் மத்தியில்  ஆளும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவை.  இதனால் இந்த இரண்டு மாநில ஆளுநர்கள் மூலமாக மத்திய பாஜக அரசு இந்த மாநிலங்களின் செயல்பாடுகளை முடக்கி வைக்க முயல்கிறது. இந்த மாநில அரசுகள் நிறைவேற்றும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைப்பதை  ஆளுநர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில்  ஆளுநராக பணியாற்றும் ஆர்.என்.ரவி தமிழக அரசின்  20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்.  இதனால் வெறுத்துப்போன திமுக அரசு தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆளுநரின் செயலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்,  கிடப்பில் போட்டு வைத்திருந்த பத்து மசோதாக்களை மீண்டும் தமிழக அரசுக்கே ஆளுநர் ரவி திருப்பி அனுப்பி உள்ளார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இதேபோல பஞ்சாப் மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை முடிக்காமல், தொடர்ந்து மழைக்கால கூட்டத்தொடரை அரசு நடத்தியது சட்ட விரோதம் என்றும் அதில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் செல்லாது என்றும் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்தார். இதனால்  பஞ்சாப் அரசு  உச்ச நீதிமன்றத்தில்  இதுகுறித்து முறையிட்டது.

இந்த வழக்கை  விசாரித்த உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு,   மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட பேரவையை ஒத்தி வைப்பது, முடித்து வைப்பது என்பது பேரவைத் தலைவரின் முடிவுக்கு உட்பட்டது. ஆளுநர்  அதில் கேள்வி எழுப்ப முடியாது. அது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாகும்.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

பஞ்சாப் பேரவையில் ஜூன் 19,20-ம் தேதிகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செல்லும். ஆகையால், அந்த மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்க வேண்டியது கட்டாயம். மேலும், பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை காலவரையின்றி ஆளுநர் கிடப்பில் போட முடியாது. இதில் ஆளுநர் நெருப்புடன் விளையாடுகிறார்.

குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநர், மாநிலத்துக்கு பெயரளவில் தலைவராவார். மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு உட்பட்டு அவர் செயல் படவேண்டும்’ என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

இதையடுத்து பஞ்சாப்  அரசு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய மசோதா ஒன்றுக்கு பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் உச்ச நீதிமன்றம் மட்டுமே இந்த ஆளுநர்களை வழிநடத்த முடியும் என்ற நிலை உருவாகி உள்ளதாக அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதையும் வாசிக்கலாமே... HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!

HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!

அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!

அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in