‘புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு நிவாரணம் எங்கே?’

பாஜக எம்பி குற்றச்சாட்டு
தேச பாதுகாப்பு பணியில் சிஆர்பிஎஃப் வீரர்கள்
தேச பாதுகாப்பு பணியில் சிஆர்பிஎஃப் வீரர்கள்

’புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான ராணுவத்தினரில், ராஜஸ்தானை சேர்ந்த 5 வீரர்களின் மனைவிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை’ பாஜக எம்பி கிரோடி லால் மீனா குற்றம்சாட்டி உள்ளார்.

2019, நவ.14 அன்று சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகன அணிவகுப்பில் இடைமறித்த, ’ஜெய்ஷ் இ முகமது’ தற்கொலைப்படை தாக்குதலால் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களில் 5 பேர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அப்போது அந்த ராணுவ வீரர்களின் மனைவியருக்கு, ரொக்கத்தொகை, இலவச மனை உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும், பள்ளி கல்லூரி உள்ளிட்ட இடங்களுக்கு வீர மரணமடைந்த வீரர்களின் பெயர்கள் சூட்டப்படும் என்றும் ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்திருந்தது.

ஆனால் ”அதன் பின்னர் 4 ஆண்டுகளைக் கடந்துவிட்ட போதும், நாட்டுக்காக உயிரிழந்த வீரர்களின் மனைவியருக்கு உரிய நிவாரணம் போய்ச் சேரவில்லை. அரசு உறுதியளித்தவாறு ராணுவ வீரர்களின் பெயர்கள் எங்கேயும் சூட்டப்படவில்லை. இது குறித்து ராணுவ வீரர்களின் குடும்பத்தாரோடு முதல்வரை சந்தித்து முறையிட முயன்றபோதும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை” என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் வேதனை தெரிவித்திருக்கிறார், பாஜக எம்பியான கிரோடி லால் மீனா.

ராஜஸ்தான் மாநிலத்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் அசோக் கெலாட் முதல்வராக ஆட்சி புரிகிறார். 2023 டிசம்பருக்குள் ராஜஸ்தான் மாநிலத்தின் 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி, தேர்தல் பிரச்சாரத்துக்கு முன்னோட்டமாக காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள் பாஜக சார்பில் அங்கே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் புறக்கணிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்தினரின் வேதனையும் சேர்ந்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in