`ஈபிஎஸ்ஸை பிடித்து சிறையில் போடுங்கள்'- முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி

ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி
ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி `ஈபிஎஸ்ஸை பிடித்து சிறையில் போடுங்கள்'- முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி
Updated on
1 min read

"மக்கள் தீர்ப்பையே நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இப்போதாவது எடப்பாடி பழனிசாமி கைது செய்து சிறையில் போடுங்கள்" என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி ஆவேசமாக கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைப்போல் வரும் காலத்தில் இப்படிப்பட்ட தோல்வியை தான் எடப்பாடி பழனிசாமி சந்திக்க நேரிடும். அவர் தனது தவறை திருத்திக் கொள்ளாவிட்டால் இது தொடரும். ஜெயக்குமார் சொல்கிற காரியம் வேதனையாக இருக்கிறது. எங்களை சேர்க்க மாட்டோம் என்று சொல்லி வருகிறார். இது அவருடைய அப்பன் வீட்டு சொத்தா? இது யார் வீட்டு சொத்து. சேர்க்க மாட்டோம், சேர்க்க மாட்டோம் என்று சொல்வதற்கு இவருடைய அப்பன் செத்தா? சொந்த தொகுதியில் தோல்வி அடைந்து தெருவில் இருக்கிறார்.

மாநகராட்சி தேர்தலிலும் தோல்வி. சென்னையில் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க உங்களுக்கு யோக்கியதை இல்லை. கட்சி ஓபிஎஸ் உடையது. அதிமுக எங்களுடையது. தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்னுடைய வேண்டுகோள். இப்போது எடப்பாடி யோக்கியதை என்ன என்பதை தெரிந்து கொண்டீர்கள். மக்கள் தீர்ப்பையே நீங்கள் புரிந்து கொண்டீர்கள். வெற்றி உங்களுடைய பிறந்த நாளில் கிடைத்திருக்கிறது. வாழ்த்துகள். முதலமைச்சரை பார்த்த அன்போடு சொல்கிறேன், நீங்கள் நீடூடி வாழ்க. இப்போதாவது எடப்பாடி பழனிசாமி கைது செய்து சிறையில் போடுங்கள்.

யார் யார் ஊழல் செய்தார்களோ அவர்களை தெருவில் இழுத்துக் கொண்டு போங்கள். நீங்கள் அவர்களை இழுத்துப் போகவில்லை என்றால் இந்த நாடு மன்னிக்காது. ஈரோட்டில் உங்களை மிகவும் அசிங்க அசிங்கமாக திட்டியிருக்கிறார். அம்மாவை திட்டி இருந்தால் ஈரோட்டை விட்டு அவர் வெளியேறி சென்றிருக்க முடியாது. அதை நீங்கள் சகித்துக் கொண்டீர்கள். ஊழல்வாதிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டீர்கள். ஒவ்வொருத்தராய் சிறையில் பிடித்துப் போடுங்கள். சந்தேகப்படும் நிலைக்கு ஆளாக்க வேண்டாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சிறையில் பிடித்து போடுங்கள்" என்றார் ஆவேசத்துடன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in