புதுச்சேரி எம்எல்ஏ மகன் மீட்பு: போலீஸாருக்கு பயந்து ஓடினாரா?

திலகரசர்
திலகரசர்

கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல்போன புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அங்காளனின் மகன் திலகரசர் நேற்று இரவு போலீஸாரால் மீட்கப்பட்டார்.

புதுச்சேரி மாநிலம் திருபுவனை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் (52). இவரது மகன் திலகரசர் (28). கடந்த 4-ம் தேதி இரவு அவர் திடீரென மாயமானார். ‘அம்மா சென்ற இடத்திற்கே செல்கிறேன். என்னைத் தேடாதே’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல்போன அவரை போலீஸார் பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். இந்த நிலையில் மரக்காணம் பகுதியில் இருந்த அவரை நேற்று இரவு புதுச்சேரி திருக்கனூர் போலீஸார் கண்டறிந்தனர். அங்கிருந்து புதுச்சேரிக்கு அழைத்துவந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் பேருந்தில் உதவி நடத்துநராக வேலை பார்த்துவந்த அவர், திருக்கனூர்- புதுச்சேரி வழித்தடத்தில் 2 முறை பேருந்தை ஓட்டியிருக்கிறார். அப்போது செல்லிப்பட்டு, கலித்திரம்பட்டு பகுதியில் விபத்தை ஏற்படுத்தியதில் சிலர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக தமிழகப் பகுதியான கண்டமங்கலம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணைக்காக திலகரசரை தேடி வந்தனர். இதற்கு பயந்து அவர் மாயமானதாக போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in