கும்பாபிஷேகத்தில் ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன்.
கும்பாபிஷேகத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.என்னை எதிர்க்கிறவர்களை மக்கள் புறம் தள்ளுவார்கள்: தமிழிசை தடாலடி!

என்னை எதிர்க்கிறவர்களை மக்கள் புறம் தள்ளுவார்கள்: தமிழிசை தடாலடி!

என்னை எதிர்ப்பவர்களைப் பற்றி நான் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. அவர்களை மக்கள் புறம் தள்ளுவார்கள் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

சீர்காழி சட்டநாதர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட  புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆன்மிகமும், தமிழும் பிரிக்க முடியாது. ஆன்மிகத்தோடு கூடிய தமிழ் இன்னும் தமிழகத்தில் பரப்பப்பட வேண்டும். தமிழுக்கும், ஆன்மிகத்திற்கும் சம்பந்தம் இல்லை என சில பேர் கொள்கை ரீதியாக பேசி வருகிறார்கள்.  அது தவறு என மக்கள் தங்கள் நடவடிக்கையில் நிரூபித்துக் கொண்டு வருகிறார்கள். தமிழோடு சேர்ந்து ஆன்மிகம் தழைக்கும். தமிழும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது  என்ற எண்ணம் இன்னும் அதிகமாக விதைக்கப்பட வேண்டும் .

தமிழ்நாடு ஆளுநர் அவரது கருத்தைச் சொல்கிறார். அதற்காக கருப்புக் கொடி காண்பிப்பது தவறு. எல்லோருக்கும் தமிழகத்தில் சென்று வருவதற்கு உரிமை உள்ளது.  அவரவர்கள் கருத்தைச் சொல்வதற்கும் உரிமை உள்ளது.  ஆன்மிக நிகழ்ச்சிக்கு அழைப்பை ஏற்று வரும்போது இது போன்ற போராட்டங்களைத் தவிர்ப்பது நல்லது.

புதுச்சேரி ஆளுநர் வெளியேற வேண்டும் என்ற சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.  கொரோனா நேரத்தில் புதுச்சேரி மக்களுக்காக அந்த அளவிற்கு சேவையாற்றி உள்ளேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை எதிர்த்து போராடுபவர்களுக்கெல்லாம் என்னிடம் சுமூகமான உறவு உள்ளது. ஓராண்டுகளில் 1500 கோப்புகளை சரி செய்துள்ளேன். 17  கோப்புகளுக்கு சந்தேகங்களை எழுப்பி உள்ளேன்.

குழந்தைகளுக்கு லேப்டாப், மருத்துவமனையை மேம்படுத்துவது, மற்றும் 2000 ரூபாய் பணம் கொடுப்பது  உள்ளிட்ட அனைத்திலும் முதலமைச்சர் என்ன நினைக்கிறாரோ அதற்கு நான் ஒப்புதல் அளித்துள்ளேன். தான் தோன்றித்தனமாக முதலமைச்சரையும், அமைச்சரையும் ஒதுக்கிவிட்டு ஆளுநர் கையில் அதிகாரத்தை எடுத்துள்ளார்  என்பதை முற்றிலும் நான் மறுக்கிறேன்.

எனவே, என்னை எதிர்ப்பவர்களைப் பற்றி கொஞ்சம் கூட நான் கவலைப்படவில்லை.  எனது பணியில் கொஞ்சம் கூட சுயநலம் இல்லை.  ஆளுநர் எப்போதும் இங்கேயே உள்ளார் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகிறார்.  நான் இங்கேயே இருப்பது குறித்து அவர் சந்தோஷப்பட வேண்டும்.  எனவே, என்னை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்பவர்களை மக்கள் புறம் தள்ளுவார்கள் என்பது என்னுடைய கருத்து" என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in