
புதுக்கோட்டையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அரசு பார்வையற்றோர் பள்ளியில், இனிப்புகள் வழங்கி மத்தாப்பு கொளுத்தி, விஜய் ரசிகர்கள் தீபாவளி கொண்டாடினர்.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள்(நவ.12) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் ஆகியவை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை வித்தியாசமாக கொண்டாட புதுக்கோட்டை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் முடிவு செய்தனர்.
இதன்படி, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே அரசு பார்வையற்றோர் பள்ளியில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் ஜாபர் பர்வேஸ் தலைமையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது.
அப்போது, பள்ளியில் பயின்று வரும் மாற்றுதிறனாளி மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி, தீபாவளி வாழ்த்து கூறப்பட்டது. தொடர்ந்து மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் மாணவ, மாணவிகளுடன் கம்பி மத்தாப்பு மற்றும் புஸ்வானம் மற்றும் வெடிகளை வெடித்து மகிழ்ந்தனர்.
இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கி தங்களுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிய மாவட்ட தலைவருக்கு மாணவ, மாணவியர்கள் தீபாவளி வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். விஜய் ரசிகளின் இந்த செயல் ஆசிரியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் வாசிக்கலாமே...
பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!
வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஐயப்பனுக்கு தங்க அங்கி.. சபரிமலையில் இன்று நடை திறப்பு!
செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!