10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை நாளை வெளியீடு?

பொதுத் தேர்வு
பொதுத் தேர்வு
Updated on
1 min read

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை நாளை வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை நாளை காலை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களால் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

2024ம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல், நீட் தேர்வு, ஜேஈஈ நுழைவு தேர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த பொதுத்தேர்வு அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in