`டிஜிபியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை; பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு வேண்டும்'- உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு

`டிஜிபியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை; பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு வேண்டும்'- உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு

சென்னையில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கேட்டு அதிமுக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து அதிமுக குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இதனிடையே, அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை திடீரென பற்றவைத்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். முதல்வர் பதவி, எதிர்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்டவற்றை எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக் கொடுத்தார் ஓபிஎஸ். இந்த தடவை ஒற்றைத் தலைமையை விட்டுக் கொடுக்க ஓபிஎஸ் தயாராக இல்லை. இதனால், ஒற்றைத் தலைமைக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறாா். ஒற்றைத் தலைமை வேண்டும் என்று ஈபிஎஸ் ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

அதிமுக மாவட்ட செயாளர்களில் 64 பேர் ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவாகவும், 11 பேர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகவும் இருந்து வருகின்றனர். அண்மையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், எடப்பாடி ஆதரவாளர்களை தாக்கினர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். இதனால் தலைமை அலுவலகத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் பெஞ்சமின் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், பொதுக்குழுவுக்கு போலீஸ் பாதுகாப்பு தரக்கோரி கடந்த 7 மற்றும் 15 ஆகிய தேதிகளில் டிஜிபியிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். வழக்கை வரும் 22-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்காக நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in