`கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை இலவசமாக வழங்கவும்'- ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வலியுறுத்தல்

`கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை இலவசமாக வழங்கவும்'- ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வலியுறுத்தல்

`கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை ஒன்றிய அரசு இலவசமாக வழங்க வேண்டும்' என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `இந்தியாவில் ஒவ்வொரு எட்டு நிமிடத்திற்கும் ஒரு பெண் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறந்து போகிறார் என்கிறது புள்ளி விவரம். ஒவ்வொரு ஆண்டும் 1.25 லட்சம் பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் 75,000 பேர் உயிரிழப்பதாகவும் தெரியவருகிறது. இந்த நோயை ஹெச்.பி.வி. தடுப்பூசியைச் செலுத்துவதின் வாயிலாகத் தடுக்க முடியும் என்று பல்வேறு நாடுகளின் அனுபவங்கள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன.

இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அரசு இதுவரை இந்த தடுப்பூசியை இலவசமாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கவில்லை என்பதனை சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் உறுதி செய்துள்ளது. இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் நிலையில் ஒன்றிய அரசு 11 வயது முதல் 15 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு விலையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in