பிசுபிசுத்து போன அண்ணாமலை பாலிடிக்ஸ்... வாக்குரிமை கேட்டு போராடியவர்களின் விரல்களில் அடையாள மை!

பிசுபிசுத்து போன அண்ணாமலை பாலிடிக்ஸ்... வாக்குரிமை கேட்டு போராடியவர்களின் விரல்களில்  அடையாள மை!

கோவையில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளதாக கூறி, ’பீப்பிள் ஃபார் அண்ணாமலை’ என்ற அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பலரது விரல்களில் வாக்களித்ததற்கான அடையாளமாக மை இருந்தது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மக்களவைத் தொகுதியில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. வாக்குப்பதிவின்போது பல வாக்காளர்கள், தங்களது பெயர்கள் நீக்கப்பட்டதால் தங்களால் வாக்களிக்க முடியவில்லை என குற்றம் சாட்டினர். குறிப்பாக கோவை கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அங்கப்பா மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் 800க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆனால் இது தொடர்பாக விளக்கம் அளித்த மாவட்ட நிர்வாகம், உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள் என 100க்கும் குறைவானவர்கள் மட்டுமே அந்த வாக்குச்சாவடி மையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலாக 250க்கும் மேற்பட்டோர் புதிதாக அந்த வாக்குச்சாவடி மையத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்திருந்தனர். இதனிடையே அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சில தன்னார்வலர்கள் இணைந்து ’பீப்பிள் ஃபார் அண்ணாமலை’ என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கோவை மக்களவைத் தொகுதியில் லட்சக்கணக்கானோரின் வாக்குகள் நீக்கப்பட்டதாக கூறி அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். கைகளில் ஆங்கிலத்தால் எழுதப்பட்ட பதாகைகளை எழுதியபடி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவிற்கும் தங்களது அமைப்பிற்கும் தொடர்பில்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

ஆனால் பாஜகவினர் போராட்டம் துவங்கும் போது ’பாரத் மாதா கி ஜே’ என்ற முழக்கத்துடன் துவங்கி, முடிக்கும் போதும் அதே முழக்கத்தை கூறி முடித்தனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட பலரது விரல்களிலும் வாக்களித்ததற்கான அடையாளமாக கருப்பு மை வைக்கப்பட்டிருந்தது பளிச்சென தெரிந்தது. இது குறித்து கேட்டபோது தங்களில் சிலருக்கு வாக்கில்லை எனவும், வாக்குகள் இல்லாதவர்களுக்காக இந்த போராட்டத்தை நடத்தி இருப்பதாகவும் அவர்கள் விளக்கம் அளித்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கைகளில் மை வைக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி பலரும் இவர்களை விமர்சித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள்... காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!

முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in