‘ஈபிஎஸ் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை’ - திமுகவை கண்டித்த போராட்டத்தில் அதிமுகவை வசைபாடிய பாஜக தலைவர்கள்!

தமிழக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்திமுகவை கண்டித்து போராட்டம்; அதிமுகவை வசைப்பாடிய பாஜக தலைவர்கள்..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பொய் வழக்குப் போடுவதாக கூறி சென்னையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர்கள் அதிமுகவினரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

அதிமுக - பாஜக மோதல் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த நிலையில் இரண்டு தரப்பினரும் சற்று அமைதிக் காத்து வருகின்றனர். இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பேசிய பாஜக துணைத்தலைவர் கராத்தே தியாகராஜன், ’’ அந்த அம்மா இருந்தவரை ஜெயக்குமார், செல்லூர் ராஜு உள்ளிட்ட அதிமுகவினர் எதாவது பேசினார்களா..? இல்லை. ஆனால் நாங்கள் தையிரியமாக அந்த அம்மாவை எதிர்த்து பேசிவிட்டு வெளியே வந்தோம். சபாநாயகராக இருந்த ஜெயகுமாரை ஏன் அம்மா தூக்கினார்கள் என்பதையெல்லாம் இவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். அண்ணாமலை யாருக்கும் அடங்காதவர், அவரை அடக்க நினைத்தால் இவர்கள் தான் அடங்கி போவார்கள். அதனால் செல்லூர் ராஜு, ஜெயக்குமார் போன்றவர்கள் வாயை அடக்கி பேச வேண்டும்’’ என்றார்

அவரைத் தொடர்ந்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி, ‘’ 2026 ல் பாஜக தலைமையில் தான் தமிழகத்தில் ஆட்சி அமையும் அண்ணாமலை நிச்சயம் முதலமைச்சராக பொறுப்பேற்பார். அப்போது திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் குறிப்பாக திமுகவை சேர்ந்தவர்கள் ஜெயிலில் இருப்பார்கள். எங்கள் தலைமையை அல்லது தலைவரை விமர்சித்தால் அது யாராக இருந்தாலும் அவர்களுக்கு தக்கப்பதிலடி கொடுப்போம்’’ என்றார்.

இது ஒருபுறம் இருக்க மத்திய சென்னை மாவட்டத்தலைவர் விஜய் ஆனந்த் ’’தமிழகத்தின் பிரதான எதிர்கட்சி பாஜக தான். எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை’’ என பேச அவரிடம் இருந்து மைக்கை தட்டிப்பறித்தார் சென்னை கோட்டப் பொறுப்பாளர் கரு. நாகராஜன். இதனைக் கண்ட குஷ்பூ உட்பட மேடையில் நின்றிருந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in