`மத்திய அரசே, கொஞ்சம் இலங்கைத் தமிழர்களையும் கவனியுங்கள்'

கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
`மத்திய அரசே, கொஞ்சம் இலங்கைத் தமிழர்களையும் கவனியுங்கள்'

``இலங்கையில் வசிக்கும் பூர்வீகத் தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பேரழிவுக்கு ஆட்சியாளர்களின் தவறான கொள்கையே காரணம். ஒரே நேரத்தில் 100% இயற்கை வேளாண்மைக்கு மாறியதால் நெல் உள்ளிட்ட உணவு தானியங்களின் உற்பத்தி பாதித்து, விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி மேற்கொண்ட இலங்கை ஒப்பந்ததின்படி, வடக்கு-கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும். இதேபோல, பொருளாதாரப் பிடியில் சிக்கிய இலங்கைக்கு, இந்தியா 7,600 கோடி ரூபாய் கடனுதவி செய்துள்ளது. இலங்கையில் வசிக்கும் பூர்வீகத் தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in