வடக்குக்குச் செழிப்பான அறிவிப்புகள்: பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் விமர்சனம்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்மத்திய பட்ஜெட் மீது கமல்ஹாசன் விமர்சனம்

வடக்குக்குச் செழிப்பான, தமிழகத்துக்கு பெரிய அறிவிப்புகளோ நிதி ஒதுக்கீடுகளோ இல்லாத, ஏமாற்றங்கள் மிகுந்த நிதிநிலை அறிக்கை என்று மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கோடிக்கணக்கான மக்கள் அன்றாட வாழ்வை நகா்த்த அல்லாடும் சூழலில் இந்திய பொருளாதாரம் பிரகாசிக்கிறது என்ற வெற்றுப் பெருமையுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மத்திய நிதிநிலை அறிக்கையில் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்த நேரடிப் பயன் தரும் திட்டங்கள் இல்லை.

நடுத்தர வா்க்கத்துக்கான சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருவாய் இழப்பால் தவிக்கும் நடுத்தர மக்களுக்கு இந்த வரிச்சலுகையால் பெரிய பலன் இருக்கப் போவதில்லை. கிராமப் பொருளியலை மேம்படுத்த, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அறிவிப்புகள் ஏதும் இல்லை" என்று கூறியுள்ளார்.

மேலும்," சேமிப்புக்குப் பதிலாக, செலவை ஊக்குவிக்கும் திட்டங்களும், காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு உற்சாகமளிக்கும் அறிவிப்புகளும்தான் நிதிநிலையில் பளிச்சிடுகின்றன. வடக்குக்குச் செழிப்பான, தமிழகத்துக்கு பெரிய அறிவிப்புகளோ நிதி ஒதுக்கீடுகளோ இல்லாத, ஏமாற்றங்கள் மிகுந்த நிதிநிலை அறிக்கை இது" என்று அவா் கூறியுள்ளாா்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in