அர்விந்த் கேஜ்ரிவாலின் மனைவிக்கு அனுப்பட்ட சம்மனுக்குத் தடை - உயர் நீதிமன்றம் அதிரடி!

அர்விந்த் கேஜ்ரிவால் மனைவி சுனிதா
அர்விந்த் கேஜ்ரிவால் மனைவி சுனிதா

டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலம் என 2 வாக்காளர் அட்டை வைத்திருந்ததாக சுனிதா கேஜ்ரிவாலுக்கு எதிராக பெருநகர குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. வரும் 18-ம் தேதி சுனிதா கெஜ்ரிவால் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், சம்மனுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால். இவர் டெல்லியின் சந்தனி தொகுதி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஷஹீதாபாத் தொகுதி என இரண்டு தொகுதியில் வாக்காளர் பெயரை பதிவு செய்திருப்பதாகவும், இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என்றும் பாஜக தலைவர் ஹரிஷ் குரானா வழக்கு தொடர்ந்திருந்தார்.

அர்விந்த் கேஜ்ரிவால் மனைவி
அர்விந்த் கேஜ்ரிவால் மனைவி

இந்த வழக்கில் சுனிதா கேஜரிவால் நவம்பர் 18-ல் ஆஜராக டெல்லி பெருநகர நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. சம்மனுக்குத் தடை விதிக்கவும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சுனிதா கேஜ்ரிவால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் சம்மனுக்குப் பிப்ரவரி 1-ம் தேதி வரை தடை விதித்தது. மேலும் அன்றைய தினத்துக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

அர்விந்த் கேஜ்ரிவால் மனைவி
அர்விந்த் கேஜ்ரிவால் மனைவி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in