பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கு ரத்து

 நக்கீரன் கோபால்
நக்கீரன் கோபால்

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக ஆளுநரை தொடர்புபடுத்தி கட்டுரை வெளியிட்டதாக, ஆளுநரின் செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்மலாதேவி
நிர்மலாதேவி

கடந்த 2018ம் ஆண்டு கல்லூரி பெண்களை தவறாக வழி நடத்தியதாக கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி என்பவர் கைது செய்யப்பட்டார். அவருடன் அப்போது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்தை தொடர்புபடுத்தி கட்டுரைகள் வெளியிட்டதாக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டம் 124 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நக்கீரன் கோபால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.சிவஞானம், வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் அந்தக் கட்டுரை காரணமாக ஆளுநர் தனது அரசியல் சாசன கடமைகளை செய்ய முடியவில்லை என்பது நிரூபிக்கப்படவில்லை எனவும் கூறி நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in