ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுக்கும் வீடியோ... உண்மைத்தன்மையை ஆராய ஆட்சியர் உத்தரவு!

அண்ணாமலை
அண்ணாமலை

தனக்கு ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணம் கொடுப்பது போன்ற வீடியோ வைரலாக பரவிய நிலையில், அந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ”இந்தத் தேர்தலில் ஒரு ரூபாய் கூட செலவழிக்கப் போவதில்லை” என தெரிவித்திருந்தார். மேலும், “தமிழகத்திலேயே மிகக் குறைவாக தேர்தல் செலவு செய்த தொகுதியாக கோவையை மாற்றிக் காட்டுவேன்” எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.

அண்ணாமலையில் இந்த பேச்சுக்கு பிரதான எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக சார்பில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தனர். எடப்பாடி பழனிசாமி , “ஒரு ரூபாய் செலவு பண்ணலன்னா சிங்கிள் டீ கூட குடிக்க முடியாது” என்று அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில், ஆரத்தி எடுக்கும் பெண் ஒருவருக்கு அண்ணாமலை மறைத்து வைத்து பணம் கொடுக்கும் வீடியோ வேகமாக பரவியது. அந்த வீடியோவில், ஆரத்தி எடுக்கும் பெண்ணின் தட்டுக்கு கீழே அண்ணாமலை பணத்தை மறைத்து வைத்து கொடுப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்தக் காட்சிகளை பகிர்ந்து, எதிரணியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

வாக்களிக்க பணம்
வாக்களிக்க பணம்

அந்தப் புகாரின் அடிப்படையில், அண்ணாமலை பணம் கொடுக்கும் வீடியோ குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் இல்லை. அதனால் அதன் உண்மை தன்மை குறித்து ஆராய போலீஸாருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது கோவை மாவட்ட பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in