காவிரி விவகாரம்; மாண்டியாவில் முழு அடைப்பு! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மாண்டியாவில் முழு அடைப்பு போராட்டம்
மாண்டியாவில் முழு அடைப்பு போராட்டம்

தமிழ்நாட்டிற்கு ஐந்தாயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு காவிரி நீரை திறக்க வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து மாண்டியாவில் கன்னட அமைப்பினர் மற்றும் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் அங்கு பரபரப்பு நிலவு வருகிறது.

தமிழ்நாட்டிற்கு ஐந்தாயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு செப்டம்பர் 13 முதல் தண்ணீர் திறக்க வேண்டுமென காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவிற்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கன்னட அமைப்பினர் மற்றும் விவசாயிகள் அமைப்பு சார்பில் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முழு அடைப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் மனித சங்கிலி போராட்டம் மற்றும் சாலையில் படுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மாண்டியா உட்பட கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை அம்மாநில அரசு செய்துள்ளது. இந்த போராட்டங்கள் காரணமாக கர்நாடகாவில் பெரும் பரபரப்பு நிலவு வரும் நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

முன்னதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், கர்நாடகா அரசு மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என அறிவித்திருந்தார். அதேசமயம் நீதிமன்றத்தின் உத்தரவின் படி செயல்பட உள்ளதாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தற்போது இந்த போராட்டங்கள் நடைபெற்று வருவதால் மாண்டியா மாவட்டம் முழுவதும் போக்குவரத்து முடங்கியுள்ளது. பொது மக்களின் அடிப்படை தேவைகளான பால், மருந்துகள் மற்றும் மருத்துவமனைகள் மட்டும் திறந்து இருக்கின்றன. பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதோடு, போக்குவரத்தும் முடங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாண்டியாவில் முழு அடைப்பு போராட்டம்
மாண்டியாவில் முழு அடைப்பு போராட்டம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in