
பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை பாஜக தொடர்ந்து விமர்சித்துவருகிறது. இந்நிலையில், அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.
பாஜக முன்பு பணிய மறுப்பவர்கள், அக்கட்சி முன்னெடுக்கும் முத்திரை குத்தும் அரசியல் போக்கால் தொல்லைக்குள்ளாக்கப்படுகிறார்கள் என ட்வீட் செய்திருக்கும் பிரியங்கா, “அரசியலில் சமரசமற்ற வழிகளில் இயங்கிவருவதால் லாலு பிரசாத் தாக்குதலுக்குள்ளாகிறார். அவருக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.