'தமிழ்நாட்டில் நான் கால் வைத்த போது'... ராஜீவ் காந்தி படுகொலையை நினைத்து உருகிய பிரியங்கா!

விழாவில் பேசும் பிரியங்கா காந்தி
விழாவில் பேசும் பிரியங்கா காந்தி

திமுக மகளிர் அணி நடத்திய மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 32 ஆண்டுகளுக்கு முன் தனது  தந்தை ராஜீவ் காந்தி  படுகொலை செய்யப்பட்டதை நினைவுபடுத்தி உருக்கத்துடன் பேசினார்.

சென்னையில்  திமுக மகளிர் அணி சார்பில் நேற்று  நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழாவில்  சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர் சோனியாவும், பிரியங்காவும் தமிழ்நாட்டில்  ஒரே நிகழ்வில் பங்கேற்றனர். பிரியங்கா தமிழ்நாட்டில் பேசும் முதலாவது பிரம்மாண்ட அரசியல் மேடை இது என்பதால் அவரது பேச்சு பலரும் ஆவலாக எதிர்நோக்கி இருந்தனர். 

இந்த நிகழ்ச்சியில் தமது பேச்சை தொடங்கும்போது  ஶ்ரீபெரும்புதூரில் 1991- மே 21-்ம் தேதி இரவு தந்தை ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தருணங்களை நினைவூட்டியபடி உருக்கமாகவும் துயரத்துடனும் பிரியங்கா பேசினார்.

அப்போது "32 ஆண்டுகளுக்கு முன்பு, என் வாழ்வின் இருண்ட இரவில், நான் முதன்முதலில் தமிழக மண்ணில் கால் வைத்தேன். நான் என் தந்தையின் சிதைந்த உடலைச் சேகரிக்க வந்தேன். சில மணி நேரங்களுக்கு முன் தான், என் தந்தை கொல்லப்பட்டிருந்தார்.

விழாவுக்கு வரும் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி
விழாவுக்கு வரும் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி

நானும், என் அம்மாவும் விமானத்தின் படிக்கட்டுகளில் இறங்கும்போது, ​​​​பெண்கள் கூட்டம் எங்களைச் சூழ்ந்துகொண்டு என் அம்மாவை தங்கள் கைகளில் பிடித்துக் கொண்டது. எனக்கும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் இடையே விளக்கவோ அழிக்கவோ முடியாத ஒரு பிணைப்பை அது ஏற்படுத்தி இருந்தது. நீங்கள் தான் என் தாய்,  நீங்கள் தான் என் சகோதரிகள்" என தமிழிலும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டார்.  

மேலும் தொடர்ந்து பேசிய அவர்,  "ஒவ்வொரு பெண்ணும் தனது சொந்த சக்தியை வெளிப்படுத்துவதற்கும், அதை செயல்படுத்தவும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். அதைச் செயல்படுத்துவதற்கு அவள் சுதந்திரமாக இருக்க வேண்டும். நீங்கள் மனிதகுலத்தின் சாராம்சம்.

இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தியைப் பெற்றிருக்கிறீர்கள்.  ஒருவரையொருவர் கை பிடித்து, ஒன்றுபட்டு, உதவி செய்து ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக உயர்ந்தால் பெரும் மதிப்பை பெற முடியும். சமூக மாற்றத்துக்கான புரட்சி, தமிழ்நாட்டில் தான் உருவானது. இந்திய அரசியலில், பெண்களுக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாக இருக்கிறது" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!

ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in