உ.பி-ல் மீண்டும் பிரியங்கா காந்தி: ராகுலுடன் 120கிமீ நடக்கிறார்

டெல்லி நடைபயணத்தில் ராகுலுடன் பிரியங்கா
டெல்லி நடைபயணத்தில் ராகுலுடன் பிரியங்கா

உத்திரபிரதேசம் மாநிலத்தில் இன்று தொடங்கும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில், சகோதரர் ராகுல் காந்தியுடன் கரம் கோர்க்கிறார் பிரியங்கா காந்தி.

காங்கிரஸ் கட்சியின் உபி பொதுச்செயலாளர் பொறுப்பு வகிக்கும் பிரியங்கா காந்தி சென்ற ஆண்டின் உபி தேர்தலுக்குப் பின்னர் மாநில அரசியலுக்கு இடைவெளி விட்டிருந்தார். ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் சேர்ந்து நடைபோடுவதன் மூலம், 2014 மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் உபி பணிகளை பிரியங்கா தொடங்குகிறார் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். கட்சியின் மாநில பொறுப்பாளர்களில் ஒருவரான தீபக் சிங் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

உபி மாநிலத்தின் காஜியாபாத்தில் இன்று தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை, மேற்கு உபியின் 11 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய 3 மாவட்டங்களின் ஊடாக கடந்து, ஹரியானா மாநிலத்துக்குள் நுழைய திட்டமிடப்பட்டுள்ளது. உபி மாநிலத்தில் ராகுல் யாத்திரையின் முக்கிய அம்சமாக பிரியங்கா காந்தியின் பங்கேற்பு பார்க்கப்படுகிறது.

முன்னதாக கர்நாடகா மற்றும் டெல்லியில், ராகுல் நடைபயணத்தின் குறுதி தொலைவுக்கு பிரியங்கா உடன் பயணித்துள்ளார். ஆனால் மாநிலத்தின் முழு நடைபயண தொலைவில் பிரியங்கா பங்கேற்பது இதுவே முதல்முறை.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பிரச்சாரங்களை புதிய பாணியில் கொண்டு சென்றதற்காக உபி அரசியல் களத்தில் பிரியங்கா காந்தி கூடுதல் கவனம் பெற்றார். மீண்டும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி மாநிலத்தில் அமைந்ததில், தனது நேரடி அரசியலுக்கு பிரியங்கா இடைவெளி விட்டிருந்தார். தற்போது நடைபயணத்தில் பங்கேற்பதன் மூலம் அடுத்து வரும் மக்களவை தேர்தலுக்கான உபி பிரச்சார களத்துக்கு பிரியங்கா தயாராகி விட்டார் என உ.பி காங்கிரஸார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in