
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் புதிய குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகையாக குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே ஆறு லட்சம் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தால், புதிதாக குடும்ப அட்டைகள் கேட்டு பலரும் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் புதிய குடும்ப அட்டைகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதனால் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரையிலும் புதிதாக குடும்ப அட்டைகள் யாருக்கும் வழங்கப்படவில்லை.
இதனால் உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, 4 மாதங்களாகியும் குடும்ப அட்டை கிடைக்கவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக வட்ட வழங்கல் துறை சார்பில், "கடந்த ஜூலை மாதம் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது தொடங்கி தற்போது வரை புதிய குடும்ப அட்டைகள் யாருக்கும் வழங்கப்படவில்லை.
ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய குடும்ப அட்டைக்கு பல ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 4 மாதங்களாக குடும்ப அட்டை அச்சிடப்படவில்லை. மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்கு இனி வரும் நாட்களில் பலரும் விண்ணப்பிக்க இருப்பதால், ஒரே கதவு எண்ணில் பலர் புதிதாக விண்ணப்பிப்பதையும் பார்க்க முடிகிறது. உரிய விசாரணைகள் முடிந்த பின்னர்தான், உரியவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்க இயலும்" என்கிறார்கள்.
புதிய குடும்ப அட்டைகள் கேட்டு பலரும் விண்ணப்பிக்கும் நிலையில் அச்சடிக்கும் பணி இன்னும் தொடங்காததால் தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. எனவே இது தொடர்பாக தெளிவான முடிவை அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்
10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!
ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!
அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!