பிரதமர் மாளிகையைத் துளையிட்டு திருட்டு… முக்கிய ஆவணங்கள் அழிப்பு: பின்னணியில் யார்?

பிரதமர் மாளிகையைத் துளையிட்டு திருட்டு… முக்கிய ஆவணங்கள் அழிப்பு: பின்னணியில் யார்?

இலங்கை பிரதமரின் அலரி மாளிகையில் சுவர்களைத் துளையிட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதுடன், ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றார். பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள இன்னும் ஒன்றரை வருடங்களாகும் என அவர் அளித்த பேட்டி மக்கள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என போராடத்துவங்கினர். இதன் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை மீறி கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அத்துடன் அதிபர் மாளிகையை மக்கள் அடித்து நொறுக்கினர். இதன் காரணமாக மாளிகையில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்ச தப்பியோடி விட்டார்.

இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதிவியேற்ற பின் அலரி மாளிகையில் குடியேறவில்லை. ஆனால், பிரதமரின் ஊடகப்பிரிவு இங்கு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அலரி மாளிகைக்குள் நுழைந்ததன் பின், அங்கிருந்த பொருட்கள் காணாமல் போனதாக பிரதமரின் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.

மேலும் அலரி மாளிகையின் சுவர்களுக்கு இடையில் பெரிய துளைகள் போடப்பட்டு, கதவுகள் உடைக்கப்பட்டு ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கொள்ளுப்பிட்டி காவல்நிலையத்தில் ஊடகப்பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஊடகப்பிரிவில் இருந்த இரண்டு மடிக்கணினிகள், வீடியோ கேமரா உள்ளிட்ட உபகரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலக ஊடகப் பிரிவு அலுவலகத்தில் ஆவணங்களை அழித்தவர்கள் யார், பொருட்களை திருடிச் சென்றவர்கள் யார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in