செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் படம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பேனரில் ஒட்டப்பட்ட பிரதமரின் புகைப்படம்
பேனரில் ஒட்டப்பட்ட பிரதமரின் புகைப்படம்

செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள் இடம்பெற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உயர்நீதிமன்ற கிளை வெளியிட்டுள்ள உத்தரவில், “செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள் இடம்பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ஜனாதிபதி, பிரதமர் படங்கள் சேதப்படுத்தப்பட்டால் அதில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்க எடுக்க வேண்டும்.

சர்வதேச அளவில் நடைபெறும் இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி அழியாத முத்திரையை பெற்றுத்தர வேண்டும். இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்துவதே ஒருங்கிணைப்பாளர்களின் சிறந்த மன்னிப்பாக அமையும். செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் படங்கள் இடம் பெறாதது குறித்த தமிழக அரசின் விளக்கம் ஏற்கத்தக்கவை அல்ல” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் படம் இடம்பெறாதது குறித்து சிவகங்கையை சேர்ந்த ராஜேஷ்குமார் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in