குஜராத் முதல்வர் காரில் ஏறுவதற்கு முன்பே எடுக்கப்பட்டது பிரதமர் மோடியின் கார்: காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ!

குஜராத் முதல்வர் காரில் ஏறுவதற்கு முன்பே எடுக்கப்பட்டது பிரதமர் மோடியின் கார்: காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ!

பிரதமர் மோடியின் காரில் குஜராத் முதல்வர் ஏறுவதற்கு முன்பே எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19-ம் தேதி குஜராத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றார். பிரதமரை அம்மாநில முதல்வர் பூபேந்திரபாய் பட்டேல் வரவேற்றார். அப்போது பிரதமரின் காரில் ஏறுவதற்காக பாதுகாப்பு அலுவலர் ஓடி வந்து கதவை திறக்க முயன்றார். அந்த நேரத்தில் வாகனம் திடீரென எடுக்கப்பட்டதால் முதல்வர் பட்டேல் அதிர்ச்சி அடைந்தார். இருந்தாலும் வேறு வழியின்றி பிரதமர் மோடியின் காரின் பின்னாக முதல்வர் நடந்து சென்றார். இது அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.

இந்த வீடியோவை தற்போது காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டு கிண்டல் செய்துள்ளது. அதில், குஜராத் முதல்வரின் பெயர் நினைவில் இல்லை. கூகுள் செய்து பாருங்கள். கூகுள் கொடுத்த பெயர், வீடியோவில் அதே நபர் காரில் உட்கார முயல்கிறார். இது யாருடைய கார். உங்களுக்கு தெரியும்" என்று கிண்டலாக பதிவு செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in