கார்கிலில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி!

கார்கிலில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி!

கார்கில் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று தீபாவளியை கொண்டாடினார்.

ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி அன்று எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய வருவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு சியாச்சின் மலைப்பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடி வருகிறார் பிரதமர் மோடி.

இந்த ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று தீபாவளி கொண்டாடினார். அப்போது, வீரர்களுக்கு இனிப்பு ஊட்டி பிரதமர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதன் பின்னர் மோடியுடன் வீரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் உடனான அனைத்து யுத்தங்களிலும் வெற்றி கொடி நாட்டப்பட்டு உள்ளதாகவும், தீபாவளி என்றால் பயங்கரவாதத்தின் முடிவு என்றும் கார்கில் அதை சாத்தியப்படுத்தியது என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "நீங்கள் அனைவரும், நமது எல்லைக் காவலர்கள் நாட்டின் பாதுகாப்பின் வலுவான தூண்கள். நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். அதனால்தான் நாட்டு மக்கள் நாட்டிற்குள் நிம்மதியாக வாழ்கிறார்கள். எல்லைகள் பாதுகாப்பாகவும், பொருளாதாரம் வலுவாகவும், சமூகம் நம்பிக்கையுடன் இருக்கும் போதுதான் நாடு பாதுகாப்பாக இருக்கும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in