தமிழக ஆளுநர் செய்தது சரியா, தவறா?- என்ன சொல்கிறார் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை

தமிழக ஆளுநர் செய்தது சரியா, தவறா?- என்ன சொல்கிறார் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை

தமிழ்நாடு, தமிழகம் என விவாதம் அனல் பறந்து வரும் நிலையில் தன் பங்கிற்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு என்ற பெயரை அறிமுகம் செய்தது காமராஜர் ஆட்சிகாலத்தில் தான். அதனால் அந்த பெருமை முதலில் காமராஜரையே சாரும் என பேசி அனல் கூட்டியுள்ளார்.

சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சியில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துக் கொண்டார். இந்த விழாவில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், காமராஜர் ஆட்சி காலத்தில் இருந்த அமைச்சர் சி.சுப்பிரமணியம் சிலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி என தொடங்கினார். தொடர்ந்து தமிழை ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் கொண்டு வந்தவர் காமராஜர் அதனை யாராலும் மாற்ற முடியாது.

1957, 58-ம் ஆண்டு சி. சுப்பிரமணியம் நிதிநிலை அறிக்கையை தமிழில் தாக்கல் செய்தார். ஆனால் இன்றைக்கு தமிழ் தமிழ் என்று சொல்லிக் கொள்பவர்களின் ஆட்சியில் நிதியமைச்சருக்கு தமிழ் தெரியாது என கிண்டலடித்தார்.

இன்றைக்கு தமிழகம், தமிழ்நாடு என விவாதம் சென்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் சரித்திரத்தை யாராலும் மாற்ற முடியாது. அன்றைக்கே சட்டப்பேரவையில் மெட்ராஸ் மாகாணம் என்பதை மாற்றி தமிழ்நாடு, தமிழ்நாடு அரசு என கொண்டு வந்தவர் காமராஜர்.

1961-ம் ஆண்டே மெட்ராஸ் மாகாணம் என்று எங்கெல்லாம் உள்ளதோ அவை எல்லாம் தமிழ்நாடு, தமிழ்நாடு அரசு என அழைக்கலாம் என சி. சுப்பிரமணியம் என கூறி இது சட்டத்திற்கு புறம்பானது அல்ல என சட்டமாக்காமல் செய்த தவறால் தான், அண்ணாதுரை 1967 -ல் சட்டமாக்கினார். ஆக அறிவித்த காமராஜருக்கும் பெருமை, அதை சட்டமாக்கிய அண்ணாதுரைக்கும் பெருமை.

நல்லாட்சி என்றால் காமராஜரை யாரும் தவிர்க்க முடியாது. சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் சிலவற்றை விட்டுவிட்டார் என சொல்லுகிறார்கள். அது சரியா தவறா என்பதற்குள் நான் செல்லவில்லை.

ஆனால் விடுப்பட்டவையை அமைச்சர் பட்டியலிடும் போது சமூக நீதி, நல்லாட்சி காமராஜர் என பட்டியலிட்டார். ஆக தமிழகத்தில் காமராஜரை யாராலும் தவிர்க்க முடியாது. நல்லாட்சிக்கு ஒரு உதாரணம் என்றால் அது காமராஜரின் ஆட்சியைத்தான் சொல்லுவார்கள் என தமிழிசை பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in