எண்ணெய் விளம்பர பேனரில் குடியரசு தலைவர் படம்: ஒடிசாவில் பரபரப்பு

எண்ணெய் விளம்பர பேனரில் குடியரசு தலைவர் படம்: ஒடிசாவில் பரபரப்பு

ஒடிசாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு புகைப்படத்தை தனியார் கடுகு எண்ணெய் விளம்பர பேனரில் பயன்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் கராஞ்சியா பகுதியில் ராணி எனும் தனியார் கடுகு எண்ணெய் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் தனது விளம்பர பேனர்களில் குடியரசு தலைவரான திரௌபதி முர்முவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, அதனை பொதுவெளியில் பல இடங்களில் வைத்துள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, குடியரசு தலைவரை அவமதித்ததாக கடுகு எண்ணெய் நிறுவனத்தின் விநியோகஸ்தர் மற்றும் நிறுவன உரிமையாளர் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்திய குடியரசு தலைவரான திரௌபதி முர்முவின் சொந்த மாநிலத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in