தமிழக காவல்துறையின் 21 பேருக்கு ஜனாதிபதி விருது!

குடியரசுத் தலைவர் விருது
குடியரசுத் தலைவர் விருது

இந்த ஆண்டு சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு, தமிழக காவல்துறையை சேர்ந்த 21 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் விருது
குடியரசுத் தலைவர் விருது

இந்திய அளவில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் காவல்துறையினருக்கு நாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது, குடியரசுத் தலைவரின் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. போலீஸாரின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் இந்த விருதுக்கு அவர்கள் தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் காவல்துறையை சேர்ந்த 954 பேர் குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழக காவல்துறையில் பணியாற்றும் 21 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், ஐ.ஜி பவானீஸ்வரி, சென்னை துணை ஆணையர் அரவிந்த், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை மற்றும் கிருஷ்ணமூர்த்தி, காவல் துணை கண்காணிப்பாளர்கள் மதியழகன், ராஜா உள்ளிட்ட 21 பேர் இந்த ஆண்டிற்கான குடியரசுத் தலைவர் விருதினை பெறுகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in