டெல்லியில் பிரீமியம் பேருந்துகளை இயக்க முடிவு
டெல்லியில் பிரீமியம் பேருந்துகளை இயக்க முடிவு

மேல்தட்டு மக்களுக்கு பிரீமியம் பேருந்து சேவை - அர்விந்த் கேஜ்ரிவால் அதிரடி திட்டம்

டெல்லியில் மேல்தட்டு மக்களும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் வகையில் பிரீமியம் பேருந்து சேவையை அரசு தொடங்க இருப்பதாக முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் கேஜ்ரிவால் பேசும் போது, “டெல்லியில் மாசு அளவைக் குறைக்கவும், தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்திலும் பிரீமியம் பேருந்து சேவைக்கான திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் மெட்ரோ ரயில் தொடங்கியபோது, இருசக்கர வாகனப் பயன்பாட்டை நிறுத்திவிட்டு, மெட்ரோவில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகமானது. ஆனால், மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதிய நிலையில், மீண்டும் தங்களது சொந்த வாகனங்களை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இதனால், வாகன நெரிசலும் காற்று மாசும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் பிரீமியம் பேருந்துகளை இயக்க முடிவு
டெல்லியில் பிரீமியம் பேருந்துகளை இயக்க முடிவு

இதைத் தவிர்க்க பிரீமியம் பேருந்து சேவை தொடங்கப்படுவதன் மூலம் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வகுப்பினரைச் சேர்ந்தவர்களும் பொதுப் போக்குவரத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் உரிமம் பெறுபவர்கள் ஒன்பது இருக்கைகளுக்கு குறையாத குளிரூட்டப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்து கட்டணம் டிஜிட்டல் முறையிலும், அமர்ந்து பயணிக்கும் வகையிலும் வசதி செய்ய வேண்டும்.

ஜனவரி 1, 2025- ம் ஆண்டிற்குப் பிறகு வாங்கப்படும் அனைத்து பேருந்துகளும் மின்சாரத்தில் இயக்கப்படும். இந்தப் பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணம் தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும் என தெரிவித்தார்.  

 அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in