கேப்டன், கேப்டன், கேப்டன்..!- தேமுதிக முப்பெரும் விழாவில் கண்கலங்கிய பிரேமலதா!

கேப்டன், கேப்டன், கேப்டன்..!- தேமுதிக முப்பெரும் விழாவில் கண்கலங்கிய பிரேமலதா!

``40 ஆண்டு காலமாக தனது வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அதை ஒழுங்குப்படுத்தி தன்னுடைய வாழ்க்கையை ஒரு சிஸ்டமேட்டிக்காக பிளான் பண்ணிக் கொண்டு போனவர் கேப்டன்" என்று தேமுதிக பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா உருகி இருக்கிறார்.

விழுப்புரத்தில் இன்று இரவு நடந்த தேமுதிக முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரேமலதா, "கேப்டனை பொறுத்தவரைக்கும் விருத்தாச்சலத்தில் ஜெயித்த போதும் சரி, ரிஷிவந்தியத்தில் ஜெயித்த போதும் சரி, ஒவ்வொரு முறையும் அவரது பயணத்தில் நானும் வந்திருக்கிறேன். இது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவர்தான் சட்டமன்ற உறுப்பினர். ஆனால், நான் இல்லாமல் அவர் எங்கும் போனது இல்லை. கேப்டனின் எல்லா பயணத்திலும் நானும் உடன் இருப்பேன். நாங்கள் வீட்டிலிருந்து புறப்படும் முன்பே தொண்டருக்காக, தொகுதி மக்களுக்காக கொடுக்கவேண்டிய நலத்திட்ட உதவிகள் எல்லாம் போய்விடும். அதன் பிறகுதான் நாங்கள் கிளம்புவோம். சுதந்திரம் வாங்கிய காலத்திலிருந்து கட்டப்படாத மணலூர்பேட்டை பாலத்தை சரித்திரம் படைக்கக்கூடிய அளவுக்கு கட்டித்தந்தோம். அதை இன்றைக்கும் அந்த மக்கள் நன்றியுடன் சொல்வதை நாம் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம்.

இன்றைக்கு தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் முப்பெரும் விழாவுக்கு தங்கள் சொந்த வாகனத்தில் இந்த இடத்திற்கு நீங்கள் எல்லோரும் சேர்ந்து வந்திருக்கிறீர்கள். நீங்க ஒவ்வொருவரும் நூறு பேருக்குச் சமமானவர்கள் என்பதை நான் பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

2005-ல் கேப்டன் கட்சி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை தலைவர் உட்பட கடை கோடி தொண்டர் வரைக்கும் சொந்த உழைப்பில் சம்பாதித்த காசில்தால் கட்சியை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் வேற எந்த தலைவருக்கும் அமையாத விஷயம், இனி அமையப்போவதும் கிடையாது” என்று சொல்லி கண்கலங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒட்டுமொத்த மக்களே இன்றைக்கு நல்லவர் என்று சொல்லும் தலைவர் கேப்டன்தான். கேப்டன் வராத ஊர் எது, கேப்டன் பேசாத டயலாக் என்ன, கேப்டன் உழைக்காத உழைப்பு என்ன, கேப்டன் செய்யாத உதவி என்ன? 40 ஆண்டு காலமாக தன்னுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அதை ஒழுங்குப்படுத்தி தனது வாழ்க்கையை ஒரு சிஸ்டமேட்டிக்காக பிளான் பண்ணி கொண்டுபோனவர் கேப்டன். நான் மக்களுக்கான தலைவர் என்று என்னைக்கோ அவர் முடிவு பண்ணிவிட்டார்.

மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் மேக்கப், பேண்ட் சர்ட் எல்லாம் போடுவார். மற்ற நேரங்களில் கதர் வேட்டி, கதர் சட்டையைத் தவிர வேறு உடைய அணியாத தமிழ் கலாச்சாரத்தின் சின்னமாக திகழ்ந்தவர் கேப்டன். அன்னதான பிரபுவே அவர்தான் என்று இந்த உலகமே சொல்கிறது. இன்றைக்கு, ஒன் வேர்ட் ட்விட் என்று எல்லாத் தலைவர்களும் போடுகிறார்கள். தங்களை வளர்த்துக்கொள்ள, தங்கள் கட்சியை வளர்த்துக் கொள்ள. ஆனால் கேப்டனோ, என் மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கில் ‘வறுமை ஒழிப்பு’ என்று ஒன் வேர்ட் ட்விட்டை அன்றே போட்டவர். அவருடைய சிந்தனை, செயல் எல்லாமே யார் என்றால்... மக்கள், மக்கள், மக்கள்தான்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in