ரோடு சரியில்லை; ஆனா நல்லா கட்டமைச்சிருக்காங்க... பிரேமலதாவின் பேச்சால் குழம்பிய அதிமுகவினர்!

கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்
கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்

கோவையில் பார்க்கும் இடங்களில் எல்லாம் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதாக பேசிய பிரேமலதா விஜயகாந்த், பின்னர் கடந்த ஆட்சியில் சிறப்பான முறையில் சாலைகள் கட்டமைக்கப்பட்டிருப்பதாக பேசியதால் அதிமுகவினர் இடையே குழப்பம் ஏற்பட்டது.

கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை சிங்காநல்லூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவருடன், வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்மன்.கே.அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரச்சாரத்தின் போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், ”மூன்று தெய்வங்களின் ஆசிர்வாதத்தோடு கோவையில் இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறேன். அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து அமோக வெற்றியை வழங்க வேண்டும்” என்றார்.

கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்
கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்

மேலும், ”கொங்கு மண்டலத்தில் தொழில் நிறுவனங்களின் வேடந்தாங்கலாக கோவை நகரம் விளங்குகிறது. ஆனால் இன்று கோவையில் உள்ள பெரும்பாலான மில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதைp பார்க்கும்போது மனதிற்கு வேதனையாக உள்ளது. கோவை மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவும் அவர்களது பினாமிகளும் அனைத்து மில்களையும் விலைக்கு வாங்கி கட்டிடங்களாக மாற்றி வருகின்றனர். மத்தியில் மோடி ஆட்சியில் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டதால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளது. மின் கட்டண உயர்வால் தொழில்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்
கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்

தொடர்ந்து பேசிய அவர், ”கோவையில் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை பார்க்க முடிகிறது. மீண்டும் சிறந்த தொழில் நகரமாக கோவை உருவாக அதிமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும். தற்போது கோவையில் 20 நாட்களுக்கு ஒரு முறை தான் சிறுவாணி தண்ணீர் வருகிறது. பெரும்பாலான சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. ஆனால் கடந்த ஆட்சியில் அனைத்து சாலைகளும் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்” என்றார்.

முதலில் சாலைகள் சேதம் அடைந்திருப்பதாக கூறிவிட்டு, அதிமுகவினரை சமாதானப்படுத்துவதற்காக அனைத்து சாலைகளும் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளதாக பிரேமலதா பேசியது, கூட்டத்துக்கு வந்திருந்தவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

இதையும் வாசிக்கலாமே...    

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in