“மோடி, நிதீஷுக்கு குழந்தைகள் பிறக்கக் கடவுளை வேண்டுகிறேன்” - லாலு பிரசாத் கிண்டல்

வாரிசு அரசியல் குறித்த விமர்சனத்துக்குப் பதிலடி
“மோடி, நிதீஷுக்கு குழந்தைகள் பிறக்கக் கடவுளை வேண்டுகிறேன்” - லாலு பிரசாத் கிண்டல்

வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு ஓர் அச்சுறுத்தல் தேர்தல் மேடைகள் முதல் நாடாளுமன்றம் வரை வரை பேசிவருகிறார் பிரதமர் மோடி. சமீபத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த மோடி, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சிகளைக் குறிப்பிட்டு வாரிசு அரசியல் தொடர்பாக விமர்சித்தார். மேலும், “ராம் மனோகர் லோஹியாவின் குடும்பம் எங்கே இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்? ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் குடும்பம் எங்கே? நிதீஷ் குமாரின் குடும்பத்தினரைப் பார்க்க முடிகிறதா?” என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார்.

“ஒரு கட்சி பல தலைமுறைகளாக ஒரு குடும்பத்தால் நடத்தப்பட்டால், அதில் வாரிசு அரசியல்தான் இருக்கும். காஷ்மீரில் இரண்டு அரசியல் கட்சிகள் இரண்டு குடும்பங்களால் நடத்தப்படுகின்றன. காஷ்மீர் தொடங்கி, ஹரியாணா, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இந்தப் போக்கைப் பார்க்க முடியும். வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய எதிரி” என்றும் மோடி விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், அதற்குப் பதிலளித்திருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், “நிதீஷ் குமாருக்கும், பிரதமர் மோடிக்கும் குழந்தைகள் இல்லையென்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? நிதீஷ் குமாருக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனால், அவர் அரசியலுக்குத் தகுதியானவர் அல்ல. நான் என்ன செய்வது? அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கட்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன். அப்போதுதான் அவர்களும் ’குடும்பவாத’த்தில் ஈடுபட முடியும்” என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.