விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு... மகிழ்ச்சியில் தொண்டர்கள்!

பானை சின்னத்துடன் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
பானை சின்னத்துடன் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

மக்களவைத் தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், துரை.ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னத்தை, பொதுவான சின்னமாக ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் விசிக சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த தேர்தலில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக வாக்குகள் பெற்றதாகக் கூறி, விசிகவின் கோரிக்கையை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்தது.

விசிக பானை சின்னம்
விசிக பானை சின்னம்

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசிக தொடர்ந்த வழக்கில், கடந்த தேர்தல்களில் ஒரு சதவீதத்துக்கு அதிகமாக வாக்குகள் பெற்றது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, விசிகவுக்கு பொது சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய முடிவு எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், பொது சின்னம் கோரும் விண்ணப்பத்துடன், கட்சியின் நிதியாண்டு கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசிக மேல்முறையீடு செய்துள்ளது.

இது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னம் ஒதுக்கி ஆணை பிறப்பிக்கப்படுகிறது. பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்க மறுத்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் எங்களை தவிர வேறு யாரும் பானை சின்னம் கேட்கவில்லை. பானை சின்னம் நிச்சயமாக விசிகவிற்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என தெரிவித்திருந்தார்.

திருமாவளவன் ரவிக்குமார்
திருமாவளவன் ரவிக்குமார்

இந்த நிலையில்தான் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் போட்டியிடும் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் ஏற்கெனவே பானை சின்னத்துக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுவர் விளம்பரங்கள் போன்றவற்றை செய்துள்ளனர். சின்னம் கிடைப்பதில் சிக்கல் நீடித்ததால் அவக்கட்சியின் தொண்டர்கள் துவண்டு போயிருந்தனர். இந்த நிலையில் பானை சின்னம் உறுதியாகியிருப்பதால் உற்சாகத்துடன் உள்ளனர் விசிகவினர்.

இதையும் வாசிக்கலாமே...    

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in