அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன ஆயிற்று?

அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைப்பு:  முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன ஆயிற்று?
முதலமைச்சர் மு க ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து அனாவசியமாக ஓய்வெடுக்காமல் அன்றாடமும் பணிகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறார். தமிழகம் முழுவதும் நேரில் செல்லும் அவர், மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார். அரசு சார்பில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்கிறார். சுற்றுப்பயணம் செல்லும் இடங்களில் கூட நடைபயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொண்டு உடல் நிலையை நன்கு பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில் எதிர்பாராமல் அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அவர் கட்டாய ஓய்வில் இருக்குமாறு அவர்கள் அறிவுறுத்தியதையடுத்து நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்கள் அவர் ஓய்வில் இருப்பார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் கலந்து கொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாகவும், ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in