ட்விட்டரில் மாட்டுக்கறி புகைப்படம் பதிவு... கண்டித்த சென்னை போலீஸ்: சர்ச்சையானதால் வருத்தம்

ட்விட்டரில் மாட்டுக்கறி புகைப்படம் பதிவு... கண்டித்த சென்னை போலீஸ்: சர்ச்சையானதால் வருத்தம்

நாம் தமிழர் கட்சின் நிர்வாகி ஒருவர் மாட்டுக்கறி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இது தேவையற்ற பதிவு என சென்னை போலீஸ் கண்டித்தது சர்ச்சையானதால் வருத்தம் தெரிவித்தது.

தமிழகத்தில் மாட்டுகறி சாப்பிடுவதற்கு அரசு இதுவரை எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை. இந்நிலையில் நாம் தமிழர் கட்சின் மாணவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் தான் சாப்பிட்ட மாட்டுகறி உணவு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இவர் யாருடைய ட்விட்டர் பக்கத்தையும் டேக் செய்து புகைப்படத்தை பதிவிடாத நிலையில் சென்னை காவல்துறை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அபுபக்கர் பதிவிட்ட மாட்டுகறி உணவு புகைப்படத்தை டேக் செய்து இத்தகைய பதிவு இங்கு தேவையற்றது, தேவையற்ற பதிவுகளை தவிர்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளது. இச்சம்பவம் மாட்டுகறி பிரியர்களிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

``ஒருவர் தான் சாப்பிட்ட உணவை பதிவிட்டது அவரது தனிப்பட்ட உரிமை. அப்படி இருக்கையில் காவல்துறை தேவையில்லாமல் தனிபட்ட நபரின் உரிமையில் தலையீடு என்பது கண்டிக்கதக்கது" என சமூக ஆர்வலர்கள் கண்ட குரல் எழுப்பி வருகின்றனர். இந்த பதிவு வைரலானதை அடுத்து சென்னை காவல்துறை பதிவிட்டத்தை நீக்கியதுடன், அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

அதில் அபுபக்கர் பதிவிட்ட புகைப்படத்தை பொதுமக்களில் ஒருவர் காவல்துறை பக்கத்தில் டேக் செய்து பதிவிட்டதாகவும், அந்த நபரின் பக்கத்தில் இதுபோன்ற பதிவு தேவையற்றது என பதிவிடும் போது தவறுதலாக அபுபக்கர் பக்கத்தில் டேக் ஆகி பதிவாகி விட்டதாகவும் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது உங்களுடைய தனிப்பட்ட உணவுத்தேர்வினை குறித்தல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in