கோத்தபய ராஜபக்சவிற்கு எதிராக யாழ் நகர் முழுவதும் பரபரப்பு போஸ்டர் !

கோத்தபய ராஜபக்சவிற்கு எதிராக யாழ் நகர் முழுவதும் பரபரப்பு போஸ்டர் !


கோத்தபய ராஜபக்சவை கைது செய்யக்கோரி யாழ்ப்பாணம் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் சர்வதேச அழுத்தத்தைக் கூட்டுவதற்காக வெளியிடப்பட்டுள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ ஊழல்வாதிகளான கோத்தபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக தென்னிலங்கையில் போராட்டங்கள் நடைபெற்றனது. ஆனால், அவர்கள் தமிழினப் படுகொலையாளிகள் என்பதை வெளிப்படுத்தவே இந்த போஸ்டர்களை வெளியிட்டுள்ளோம்.

சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை கைது செய்து அந்த நாட்டு அரசு நீதிமன்றம் முன் நிறுத்த வேண்டும் என்ற அழுத்தம் சர்வதேச மட்டத்தில் வலுப்பெற்றுள்ளது. தற்போது பல நாடுகளில் உள்ள சிங்கப்பூர் தூதரகங்கள் முன்பு கோத்தபய ராஜபக்சவை கைது செய்யக்கோரி கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதற்காக கையெழுத்து இயக்கமும் நடைபெற்று வருகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in