'எடப்பாடி பதறட்டும், கோபாலபுரம் கதறட்டும்': திராவிட கட்சிகளுக்கு எதிராக பாஜகவின் பரபரப்பு போஸ்டர்

மதுரையில் பாஜகவினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.
மதுரையில் பாஜகவினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.'எடப்பாடி பதறட்டும், கோபாலபுரம் கதறட்டும்': திராவிட கட்சிகளுக்கு எதிராக பாஜகவின் பரபரப்பு போஸ்டர்

தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள கருத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில், மதுரையில் அக்கட்சியினர் அதிமுக, திமுக கட்சிகளுக்கு எதிராக ஒட்டியுள்ள சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் சிலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் சில நாட்களுக்கு முன்பு இணைந்தனர். இது கூட்டணிக்கு அதிமுக செய்கிற துரோகம் என்று பாஜக நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை பாஜகவினர் எரித்து கோவில்பட்டியில் போராட்டம் நடத்தினர். இதனால், அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். இதன் காரணமாக பாஜக, அதிமுக கூட்டணி இடையே பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மாநில தலைவ ர் அண்ணாமலை," வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி என்றால் எனது பதவியை ராஜினாமா செய்வேன்" என்று கூறியதாக தகவல் வெளியானது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில்," தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பதை அதிமுக தான் முடிவு செய்யும் என்றும், யாருக்கு எத்தனை தொகுதி ஒதுக்க வேண்டும் என்பதையும் அதிமுக தான் முடிவு செய்யும்" என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார். ஆனால், " கூட்டணி குறித்து பாஜக மத்திய தலைமை தான் அறிவிப்பையும் வெளியிடும்" என்று பாஜக சட்டப்பேரவை தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை நேற்று சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை," ஓட்டுக்கு பணம் கொடுக்காத அரசியலுக்கு மக்கள் காத்திருக்கிறார்கள். கூட்டணி பற்றி முடிவெடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. கட்சி தலைமைதான் முடிவெடுக்கும். என்னுடைய கருத்து குறித்து டெல்லி மேலிட தலைவர்களிடம் நான் பேசி வருகிறேன். ஆனால், கொண்ட கொள்கையில் உ றுதியாக இருக்கிறேன்" என்று கூறினார்.

இந்த நிலையில், அவருக்கு ஆரவு அளிக்கும் மதுரையில் பாஜக சார்பில் திராவிட கட்சிகளை விமர்சித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில்," கழகங்கள் இல்லா தமிழகம், கவலைகள் இல்லாத தமிழர்கள், உங்களோடு ரத்தம் சிந்த உண்மையான கூட்டம் உண்டு, எங்கள் அண்ணாவே, எடப்பாடி பதறட்டும் , கோபாலபுரம் கதறட்டும். இவர் திராவிட அண்ணா இல்லை, சங்கிகளின் அண்ணா" என வாசகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பாஜகவினர் வெளியிட்டுள்ள இந்த பரபரப்பு சுவரொட்டி அதிமுகவினரிடையே அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in